ராமநாதபுரம் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் பெற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டி;

Update: 2024-12-16 02:39 GMT
ராமேஸ்வரம் தீவில் முதல் முறையாக இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் விளையாட்டு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட் போட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.விளையாட்டுப் போட்டியை அமிர்த வித்யாலயம் பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா துவக்கி வைத்தார்.பெற்றோர்கள் அதிக அளவு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.பள்ளியின் இந்த செயல்பாட்டை வெகுவாக பாராட்டினர்.பள்ளி முதல்வரும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். விளையாட்டு துறை சார்ந்த ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News