ராமநாதபுரம் பரதநாட்டியே அரங்கேற்றம் நடைபெற்றது

திரு உத்திரகோசமங்கை கோவிலில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது;

Update: 2024-12-16 10:04 GMT
ராமநாதபுரம் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற திரு உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதர் ஆலய திருக்கோயில் கலையரங்கத்தில் அபிநயா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் வாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வாசனின் மகள் தனசிநேகாவின் பரதநாட்டிய நாட்டிய அஞ்சலி அரங்கேற்றம் மற்றும் ராமநாதபுரம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் கார்த்திகை பௌர்ணமி முன்னிட்டு நடன நாட்டியாஞ்சலி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு எம்.ஜி.மருத்துவமனை டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.டாக்டர்கள் திருமலை வேலு,பிரேமா லெட்சுமி,தினேஷ் முகில் வழக்கறிஞர்கள் ரவிச்சந்திர ராமவன்னி,முனியசாமி, தொழிலதிபர் கருணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை டாக்டர் சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.ஆன்மீகப் பெரியோர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Similar News