கன்னியாகுமரி அருகே தோவாளை வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே மாதவன்நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்நிலையில் நேற்று மாலை மாதவன்நகர் பகுதியை சார்ந்த சிலர் நடந்து விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது விளையாட்டு மைதானத்தில் பெரிய பாம்பு ஒன்று நெழிந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விளையாட்டு மைதானத்தில் கிடந்த சுமார் 20 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர். பாம்பினை பொய்கை அணை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.