வாணியம்பாடி அருகே ஆட்டோ பேட்டரி திருட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைப்பு.
வாணியம்பாடி அருகே ஆட்டோ பேட்டரி திருட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆட்டோ பேட்டரி திருட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைப்பு. வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பகுதியில் வட மாநில இளைஞர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்று அங்கு ஒரு வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை கழட்ட முயன்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிய போது அதில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். பிடிபட்ட அந்த இளைஞரை கை கால் கட்டி தர்ம அடி கொடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்றவ்நகர காவல் துறையினர் அந்த இளைஞரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதல் சிகிச்சைக்கு பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.