கும்பகோணத்தில் நூதன முறையில் திட்டமிட்டு திருட்டு

கிரைம்

Update: 2024-12-18 02:07 GMT
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுனர் தனராஜ், இவரது மனைவி உஷா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்த இருவர், தாங்கள் மாநகராட்சி பணியாளர்கள் என்று ஒரு தண்ணீர் தொட்டி கட்ட இடம் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தனர். உஷா இடத்தை காட்டிக் கொண்டிருக்கையில் மூன்றாவதாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்துடன் தலைமறைவானார். புகாரின்பேரில் பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சங்கராபுரம் வீரபத்திரன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Similar News