தென்காசியில் தொழிலாளர் ஓய்வு இல்லத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்
தொழிலாளர் ஓய்வு இல்லத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைப்புசார் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்லத்தினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார். தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் உள்ளீட்டு ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.