இந்திரா நகர் அருகே காரை வேகமாக இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. இருவர் படுகாயம்.

இந்திரா நகர் அருகே காரை வேகமாக இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. இருவர் படுகாயம்.

Update: 2024-12-19 04:02 GMT
இந்திரா நகர் அருகே காரை வேகமாக இயக்கியதால் கவிழ்ந்து விபத்து. இருவர் படுகாயம். சேலம் மாவட்டம், ஆத்தூர், பெரிய ஏரி அருகே உள்ள முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சிவநாதன் வயது 38. இவரது மகன் நமச்சிவாயம் வயது 09. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான காரில் டிசம்பர் 14ஆம் தேதி மாலை 4 மணியளவில், கரூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது கார் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் பிரிவு அருகே சென்றபோது, காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நமச்சிவாயம் மற்றும் சிவநாதன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு சிவ நாதனை கோவை கங்கா மருத்துவமனையிலும், நமச்சிவாயத்தை கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சிவனாதனின் தந்தை தியாகராஜன் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News