சி.பி ராதாகிருஷ்ணன் அம்பேத்கர் குறித்து கருத்து !
டாக்டர் அம்பேத்கர், தமிழக அரசியல் நிலைமை, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அம்பேத்கர் குறித்து பேசிய அவர், அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிறகு மிகப்பெரியதாக போற்றக்கூடிய ஒரு தலைவர். அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஒவ்வொருவரது கடமை எனக் கூறினார்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றி குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தந்தவர் அம்பேத்கர். அதனால் தான் இன்றைக்கும் நம் நாட்டில் இந்திரா காந்தி அவர்களால் கூட இந்த ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க இயலவில்லை என்று தெரிவித்தார்.ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறது என்றால் 1971ல் கலைஞர் எதற்காக பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தினார், என கேள்வி எழுப்பினார்.