ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2024-12-20 09:54 GMT
திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்றில் தொடர் மணல் கடத்தல் என ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது விவசாய சங்க பிரதிநிதி அசோகன் என்பவர் பேசுகையில். தென்னைமரம் கடுமையான பூச்சிகள் தாக்கி தென்னை மரத்தின் குருத்துக்களில் பூச்சிகள் தாக்கி மரம் காய்ந்து வருகிறது இதைக் குறித்து பல முறை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கைகள் வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை கேரளா போல் காட்சியளித்து வரும் தென்னை தோப்பு பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி மரங்கள் காய்ந்து வருகிறது இது குறித்து மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒட கூடிய பாலாற்றில் தினமும் மணல் கடத்தல் தொடந்து இரவு பகல் என்று பாராமல் நடைபெற்று வருகிறது. இந்த மணல் கடத்தலுக்கு பள்ளி மாணவர்களை மணல் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகிறது இதை மாவட்ட கலெக்டர் தடுக்க வேண்டும், தென்னை மரங்கள் அதிகளவில் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு அழித்து வருகிறது அதை மாவட்ட நிர்வாகம் சீர்செய்து விவசாயிகளை பாதுக்காக்க வேண்டும் என பேசினார். இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் இயந்திரம் மற்றும் விதைகள்,மற்றும் தேனீக்கள் வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது பின்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மண் வள இயக்க திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மன் வள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பதன் அடிப்படையில் இத்திட்டத்தில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் சுப்பையா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News