கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய விழுப்புரம் எம்பி
விசிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள,கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழர் குடியிருப்பில் உள்ள 440 குடும்பங்களுக்கு 3 கிலோ அரிசி, 3 கிலோ சர்க்கரை, 1 கிலோ பருப்பு கொண்ட நிவாரணப் பொருட்களின் தொகுப்பை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் எம்பி இன்று வழங்கினார். உடன்,விசிக மறுவாழ்வு முகாம் தலைவர் கமலராஜா, மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, விசிக நிர்வாகிகள் நாகராஜ், பிரபாகரன், ஏழுமலை, மாரிமுத்து, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.