கோவை: சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து !

கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2024-12-21 12:01 GMT
கோவை தடாகம் சாலையில் கணுவாய் அருகே உள்ள நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வேலையிலிருந்து சாலையில் உருண்டோடிய சிலிண்டர்களை பொதுமக்கள் பாதுகாப்பாக எடுத்து வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வேனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News