பஞ்சையங்குட்டை அருகே டூவீலர் லாரி நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
பஞ்சையங்குட்டை அருகே டூவீலர் லாரி நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
பஞ்சையங்குட்டை அருகே டூவீலர் லாரி நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், க.பரமத்தி, அண்ணா நகர், மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது 50. இவர் டிசம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணியளவில், மூலப்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் பஞ்சையங்குட்டை அருகே சென்ற போது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், காந்திநகரை சேர்ந்த விஜய் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, கண்ணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.