தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

மன்னார்குடியில் திமுக இளைஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

Update: 2024-12-21 15:41 GMT
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் இளைஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பின்னர் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் , அப்பகுதி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம்.ஜி.பாலு, கோட்டூர் ஒன்றிய செயலாளர்கள் தேவதாஸ்,பால.ஞானவேல், உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News