நெல்லை மாநகர சுத்தமல்லி உள்ளிட்ட பகுதியில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டிய சம்பவத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37), கேரளா மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.