ஏ ஆர் டி சிகிச்சை எடுத்து வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்
சென்னை டான் போஸ்கோ தொண்டு நிறுவனம் வழங்கியது
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஏ ஆர் டி மையத்தில் எச்ஐவி தொற்றுள்ள ஏ ஆர் டி சிகிச்சை எடுத்து வரும் 120 குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் சிறப்பு ஊட்டச்சத்து பொருள் மற்றும் தானியங்கள் அடங்கிய தொகுப்பை சென்னை டான் போஸ்கோ தொண்டு நிறுவனம் வழங்கியது இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மருத்துவ அலுவலர் பி தேவானந்த் தலைமை தாங்கினார் மருத்துவர் எஸ் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார் சென்னை டான் போஸ்கோ தொண்டு நிறுவனத்தின் அருட்தந்தை அருளானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்தும் ஊட்டச்சத்து பொருள் அடங்கிய தொகுப்பை வழங்கினார் இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட எச்ஐவி உள்ள கூட்டமைப்பின் தலைவர் திருமதி ராஜேஸ்வரி செயலாளர் சிவசீலன் டான்போஸ்கோ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் லியோ ஆகியோர் கலந்து கொண்டனர் அரசு மருத்துவமனை ஏ ஆர் டி மைய ஒருங்கிணைப்பு ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்