தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்.

மன்னார்குடி அருகே தமிழக வெற்றி கழக கொடியேற்று விழா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேனா,  பென்சில் உள்ளிட்ட  எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-12-22 11:20 GMT
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மத்திய ஒன்றியம் சார்பில் இடையர் எம்பேத்தி ஊராட்சியில் திருவாரூர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் யூ.எம்.வி.ராஜராஜன் தமிழக வெற்றி கழக கொடியேற்றி மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு நோட்,பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது , மாற்று கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இதில் மன்னார்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் பி.சக்திவேல், பிரபாகர் ராசு, விக்னேஷ், வீரமணி உள்ளிட்ட வெற்றி கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . முன்னதாக திருவாரூர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் யூ.எம்.வி.ராஜராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது .

Similar News