கிராம மக்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கற்பூரம்பட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிராக இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் அமைய உள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கு, மத்திய அரசு அனுமதிக்க கூடாது என கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சியில் உள்ள சின்ன கற்பூரம்பட்டியில் இன்று (டிச.22) 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.