மரக்கன்றுகள் நடு விழா நடைபெற்றது
அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில் நகர மன்ற தலைவர் கலந்து கொண்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் ராசிபுரம் இடைப்படுகாடுகள் வனச்சரங்கம் 2 மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் இணைந்து தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான பசுமையாக்கல் என்ற திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் முழுவதும் சுமார் 800 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகளை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி பொறியாளர் ரேணுகா, வனச்சரங்க அலுவலர், ஆகியோர் கலைஞர் திடல் மற்றும் கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர், , நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்....