லட்சுமணன் பட்டியில் இளம்பெண் டூவீலரை வேகமாக இயக்கியதால் மூதாட்டி கீழே விழுந்து விபத்து.
லட்சுமணன் பட்டியில் இளம்பெண் டூவீலரை வேகமாக இயக்கியதால் மூதாட்டி கீழே விழுந்து விபத்து.
லட்சுமணன் பட்டியில் இளம்பெண் டூவீலரை வேகமாக இயக்கியதால் மூதாட்டி கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீரியபாளையம் அருகே உள்ள கைகழுவி ஊர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மனைவி வசந்தா வயது 57. அதே லட்சுமணன் பட்டி, காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் அனுசுயா வயது 19. இவர்கள் இருவரும் டிசம்பர் 13ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், பழைய ஜெயங்கொண்டம்- பஞ்சப்பட்டி சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை அனுசுயா ஓட்டி சென்றார். இவர்களது வாகனம் லட்சுமணன் பட்டி பகுதியில் உள்ள பூங்கொடி வீட்டின் எதிரே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வசந்தாவின் கைப்பிடி நழுவி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வசந்தாவிற்கு பின்னந் தலையிலும், வலது கால் முட்டியிலும் பலத்த காயமேற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வசந்தாவின் மகள் ராஜேஸ்வரி வயது 34 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அனுசுயா மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.