காங்கேயத்தில் ஆட்டோ நல சங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் சாமிநாதன்
காங்கேயம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நல சங்கத்தை திறந்து வைத்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஒன்றிணைத்து ஆட்டோ சங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் நல சங்கம் என பெயரிட்டு துவக்க விழா நடைபெற்றது. காங்கேயம் தினசரி மார்க்கெட் அருகே புதிதாக 50 அடி கோடி கம்பத்தில் கொடியேற்றி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் ஆட்டோ மூலமாக ஆட்டோ சங்க இடத்திற்கு வந்தனர். பின்னர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி ஆட்டோ சங்கத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காங்கேயம் நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், 4 வது வார்டு கவுன்சிலர் இப்ராஹிம் கலீலுல்லா, திமுக நிர்வாகிகள் காயத்ரி சின்னசாமி,மில்கா கந்தசாமி, வார்டு செயலாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஆட்டோ சங்க தலைவர் சரவணன், துணை தலைவர் பழனிசாமி, செயலாளர் குணசேகரன், துணை செயலாளர் தங்கராஜ்,பொருளாளர் கதிர் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையலாளர் கலந்து கொண்டனர்.