புளியங்குடி கால்நடை ஆஸ்பத்திரி அருகில் தேங்கிய மழை நீர்
கால்நடை ஆஸ்பத்திரி அருகில் தேங்கிய மழை நீர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி பகுதியில் உள்ள சிந்தாமணி கால்நடை ஆஸ்பத்திரி அருகில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கால்நடை மருத்துவமனையில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை தீர்க்க உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .