ராமநாதபுரம் பள்ளியில் பெற்றோருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது

அமிர்தா வித்யாலயம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் விளையாட்டு போட்டி நடைபெற்றது;

Update: 2024-12-23 03:03 GMT
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் விளையாட்டு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக கூடைப்பந்து போட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியை பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா துவக்கி வைத்தார். பெற்றோர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி விளையாடினர். பள்ளியின் இந்த செயல்பாட்டை வெகுவாக பாராட்டினர். இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து பள்ளி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பள்ளி முதல்வரும் , துணை முதல்வரும் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விளையாட்டு துறை சார்ந்த ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News