சங்கராபுரத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஒரு வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : சங்கராபுரம்- திருவண்ணாமலை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சங்கராபுரம் மற்றும் தேவபாண்டலத்தில் பலர் சாலையை ஆக்கிரமித்து கடை மற்றும் வீடுகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கரிமிப்பகளை ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறியனால், நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகறறும்போது, ஏற்படும் சேதாரங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பாகாது.