எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37 வது நினைவு தினம் முன்னாள் அமைச்சர் ரா காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம் ஜி எம்ஜிஆரின் 37 ஆவது நினைவு தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது இதில் பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என எம்.ஜி.ஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜர் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதில் இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.