கோவை: தத்துரூபமாக மாட்டுத் தொழுவம் அமைத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம் !

கோவை காந்திபுரத்தில் உள்ள பாத்திமா பேராலயத்தில் கிறிஸ்மஸ் கோலாகல கொண்டாட்டம்.

Update: 2024-12-25 06:31 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை வலியுறுத்தும் விதமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் 4 -வது வீதி பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.4000-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றனர். இந்த ஆண்டும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்து கூறும் விதத்தில் மாட்டுத் தொழுவம் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

Similar News