கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில், வன்னியர் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வன்னியர் சங்கத்துடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் டி எம் கே பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியின் போது 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர் அரசியல் காரணங்களால் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்ட போது இதனை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் ஆகியும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்தும், வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.