மின்வாரிய ஊழியர் படுகாயம்

தாளவாடி அருகே காட்டுப்பன்றி தாக்கி மின்வாரிய ஊழியர் படுகாயம்

Update: 2024-12-25 06:20 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி. திகினாரை கிராமத்தில் அங்குள்ள விவசாயத்தோட்டத்தில் மின்பழுதை நீக்க சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று பழனிச்சாமியை தாக்கி கைகளை கடித்துள்ளது.இதில் கை விரல் துண்டானது. அதே போல் கைகளில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது,கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் காட்டு பன்றி அட்டகாசம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகிறது. மக்களை அச்சுறுத்தியும் வருகிறது. இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News