திருப்பத்தூரில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை.
திருப்பத்தூரில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை.;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அவரது 37ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நகர கழக செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. சி. வீரமணி கலந்து கொண்டு புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் டாக்டர். திருப்பதி, செல்வம், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. டி. சி. சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் டாக்டர். நாகேந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் லீலாசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.