திருப்பத்தூர் புகைப்பட கண்காட்சியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் புகைப்பட கண்காட்சியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடும் புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பாலம்மாள்காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம் மாவட்ட மைய நூலகத்தின் வாயிலாக திருவள்ளுவர் சிலை வெள்ளி வார விழாவினை முதல் நிகழ்வான புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்கள். இந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு, திருக்குறள் தொடர்பான கவியரங்கம், கருத்தரங்கம், பேச்சரங்கம், பட்டிமன்றம், வினாடி-வினா, பேச்சுப்போட்டி, பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் டிசம்பர் 23 முதல் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், ஆசிரியர்கள், பள்ளி மாணவியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.