கண்காட்சியில் விழிப்புணர்வு அரங்கத்தை திறந்து வைத்த ஆணையர்.

மதுரையில் வர்த்தக கண்காட்சியில் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு அரங்கத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

Update: 2024-12-25 01:13 GMT
மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று (டிச.24தமிழ்நாடு உணவு பொருட்கள் வியாபாரிகள் சங்க வர்த்தக கண்காட்சி - 2024 யில் மதுரை மாநகர காவல் சார்பாக பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள காவல் அரங்கத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர், காவல் உதவி ஆணையர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள்,காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Similar News