ஆபத்தான கட்டடத்தில் இயங்கும் சாத்தணஞ்சேரி வி.ஏ.ஓ., அலுவலகம்

சந்தான செரியில் ஆபத்தான நிலையில் உள்ள விஏஓ அலுவலகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Update: 2024-12-25 12:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத் திற்கு உட்பட்டது சாத்தணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. கட்டடத்தின் கூரை சிதிலமடைந்து, மழைக்காலத்தில் நீர் சொட்டுவதால், அச்சமயம் அலுவலகம் சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுவதாக, ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கட்டட தளத்தின் உள்பகுதி மிகவும் பழுதடைந்து, சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது. இதனால், மழைக்காலத்தில் அலுவலகத்தில் பணியாற்ற ஊழியர்கள் மற்றும் சான்றுகள் பெற வரும் ப-குதிவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாத்தணஞ்சேரியில் பழுதடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என,அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News