தடுப்புச்சுவர் இல்லாத குளம் வாகன ஓட்டிகள் ' திக்... திக் '
மொட்டை குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் இருந்து, சதாவரம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மொட்டை குளம், அப்பகுதி நிலத்தடிநீராதாரமாக விளங்கிவருகிறது.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை யோரம் குளம் அமைந்துள்ளது. ஆனால், குளத்திற்குதடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் குளத்தை ஒட்டியுள்ள சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்குவழிவிட ஒதுங்கும்போது, குளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் கலப்பதால், குளத்து தண்ணீர் மாசடைந்த நிலையில் உள்ளது. எனவே, மொட்டை குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.