சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில்

தருமை ஆதீனம் சாமி தரிசனம்

Update: 2024-12-25 05:02 GMT
மார்கழி மாதத்தை முன்னிட்டு, பாடல் பெற்ற சிவன் ஸ்தலங்களில் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தரிசனம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலில், விநாயகர் சன்னதி, நவநீதேஸ்வரர் சாமி சன்னதி, சிங்காரவேலவர் சன்னதி, வேல் நெடுங்கன்னி அம்மன் சன்னதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவில் குறித்த தேவார பாடல் தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக, கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் தருமை ஆதீனத்திற்கு வரவேற்பளித்தனர். பின்னர், கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோயிலில் தரிசனம் செய்தார். கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் தருமை ஆதீனத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

Similar News