பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய்   பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-12-25 13:01 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நகர தலைவர் வாணி பிரபு தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்றார். வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களை ராஜேஷ்குமார் வழங்கினார். மாவட்ட பொதுச்செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட செயலர் சவுமியா, தொகுதி அமைப்பாளர் நாகராஜ், முன்னாள் நகர தலைவர் சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News