கபடி போட்டி பரிசளிப்பு

பரிசளிப்பு

Update: 2024-12-26 04:25 GMT
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் முதல் இடம் பெற்ற அணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் இடித்த அணிக்கு 20 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம்பிடித்த அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

Similar News