மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்கலாம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

Update: 2024-12-26 16:26 GMT
பல்ராம் சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.(WP(CIVIL) 324-2020)-ல் 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை (Manual Scavengers) கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண்-11-படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களுக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News