ராமநாதபுரம் புதிய பாம்பன் பாலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையாளர் அளித்த அறிக்கை தொடர்பாக பாலத்தில் நடைபெற்ற பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Update: 2024-12-26 07:03 GMT
ராமநாதபுரம் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே முதன்மை ஆணையர் ஒரு சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ரயில்வே துறை அதிகாரிகள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அதனை மதுரை கோட்ட மேலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாம்பன் கடலில் ரூ.535கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பால பணிகள் முழுமையாக நடைபெற்று முடிந்ததையடுத்து கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது அந்த குறைபாடுகளை உடனடியாக சரி செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாதுகாப்பு ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ரயில்வே கட்டுமான நிறுவனம் மற்றும் ரயில்வே துறை பொறியாளர் குழு தொடர்ந்து சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான ரயில்வே துறை அதிகாரிகள் புதிய ரயில் பாலத்தை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர் ட்ராலி மூலமாக பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு வந்து பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளத்தை முழுமையாக அலைன்மென்ட் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டதுடன் மையப்பகுதியில் அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலத்தை இயக்கி சோதனை செய்தார். இதன் அறிக்கையின் அடிப்படையில் விரைந்து புதிய பாலம் அறிவிக்கப்படும் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் பேசிய மதுரை கோட்ட மேலாளர் பாதுகாப்பு முதன்மை ஆணையாளர் அளித்த அறிக்கை அடிப்படையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாலம் நல்ல நிலையில் உள்ளது. விரைவில் பாலம் பணிகள் நிறைவு செய்து புதிய பலம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

Similar News