ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை விழா நடைபெற்றது
ராமநாதபுரம் ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை விழாவினை முன்னிட்டு இன்று 26-12-2024 அதிகாலை 4:00 மணிக்கு கோபூஜை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் 8:30 மணியளவில் ரெகுநாதபுரம் ஶ்ரீ முத்துநாச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வண்ணப்பொடிகள் பூசி, மேளதாளத்துடனும் , வாணவேடிக்கை களுடனும், நாட்டியக் குதிரை நடனத்துடனும் மற்றும் கரகாட்டத்துடனும் ஆடிப்பாடி பேட்டை துள்ளி வந்தனர். பின்னர் ஆராட்டு விழா நிகழ்ச்சி ஶ்ரீவல்லபை பஸ்மக்குளத்தில் நடைபெற்றது. ஆராட்டு நிகழ்வின் போது ஶ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.