திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இன்று (டிசம்பர் 27) அதிகாலை பள்ளிவாசலில் வைத்து உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பயான் நிகழ்ச்சியில் விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்க்கை ஒழுக்க நெறிமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயான் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.