சூலூர்: செப்டிக் டேங்கில் விழுந்த முதியவர் மீட்பர் உயிருடன் மீட்பு !
82 வயது முதியவர் செப்டிக் டேங்கில் விழுந்து தீயணைப்புத்துறையால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் செலகரச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான முதியவர் கிருஷ்ணசாமி. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த அவருடைய மகன் இது குறித்து தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை நிலை அலுவலர் ராமசுப்பிரமணியன், மற்றும் அவரது குழுவினர் செப்டிக் டேங்கில் மாட்டியிருந்த கிருஷ்ணசாமியை நேற்று பத்திரமாக மீட்டனர். பின்னர் சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டின் செப்டிக் டேங்கில் முதுகவர் விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.