பேராவூரணி ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பொது பிரச்சனை

Update: 2024-12-27 09:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி ரயில் நிலையம் நகரின் மையப் பகுதிக்குள் அமைந்துள்ளது. சுமார் 500 மீட்டர் நீளமுள்ள ரயில்வே நிலையத்தை சுற்றிலும் இருபுறமும் உள்ள முட்புதர்கள் தற்போது பெய்த மழையினால் முளைத்து பெரும் காடுகளாக காட்சியளிக்கிறது.  இந்த ரயில் நிலையத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட வர்த்தக வியாபார நிறுவனங்கள், கடைகள், மற்றும் குடியிருப்புகள் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த  முட்புதர் காடுகளால் கொசு உற்பத்தி அதிகமாகி, வியாபார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் பொது மக்களை அச்சுறுத்தி  டெங்கு நோய் மற்றும் பல வகையான நோய்களை பரப்பி வருகிறது.  மேலும், விஷப்பாம்புகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. அடர்ந்த முட்புதர்காடுகளால் இருப்பதால் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மறைந்து இருப்பதற்கு ஏதுவாக இந்த இடம் உள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே துறையினர் இந்த இடத்தை ஆய்வு செய்து தேவையற்ற முட்புதர்காடுகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News