ஜல்லிக்கட்டு: ஆன்லைனில் மட்டுமே முன் பதிவு.
மதுரை ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் மட்டுமே முன் பதிவு செய்யவேண்டும்.
மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன் அனுமதி பெற வேண்டும்; 8 அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும்; சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.