நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பெரிதும் அசுத்தமாக காணப்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அங்கு செல்லக்கூடிய பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். எனவே பயணிகளுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு உறுதிப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.