ராமநாதபுரம் புதிய நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது
திருப்புல்லாணி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் செலவில் புதிய நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது
கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி ஊராட்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2022-2023ல் ரூ.12 லட்சம் செலவில் புதிய நிழற்குடை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனை இன்று(டிச.27) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் & திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.