போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் போலீசார்  சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-12-27 14:40 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலீசார், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், அரசு கல்வியியல் கல்லூரி   மற்றும் தமிழ் சிந்தனை பேரவை,  சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது.                                  பேரணியை கல்லூரி முதல்வர் அருணாசலம், இன்ஸ்பெக்டர் தவமணி,  எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன், சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் பிரபாகரன், தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, குளத்துக்காடு, திருவள்ளுவர் நகர், சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக தம்மண்ணன் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நிறைவு பெற்றது இதில் பிரபாகரன் பேசியதாவது: தமிழகத்தில்  ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால்  கேன்சர் பரவி வரும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதை ஊசி தனக்குத்தானே  செலுத்தி கொண்டு அதனால் ஏற்பட நரம்புத் தளர்ச்சியால் இளமையிலேயே இளைஞர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்கும் நோக்கத்தில் இளைஞர்களுக்கு பொதுமக்களுக்கும் போதைகள் ஏற்படும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீசாருடன் பொதுமக்களும் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து  போதைப்  பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி முதல்வர் அருணசாலம் பேசியதாவது: நீங்கள் ஆசிரியராக பணியாற்ற உள்ள சூழ்நிலையில் உங்கள்  மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் மீட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்து சாதனை செய்த இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசாருக்கு சமூக விடிவெள்ளி விருது வழங்கப்பட்டது. சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலர் வேலுமணி, பொருளர் மாதேஸ்வரன், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மனோகரன்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News

கைது
மிதமான மழை