திரைப்பட பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும்போது மக்கள்

சினிமா விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்;

Update: 2024-12-28 12:55 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சங்கமித்ரா தயாரிப்பில் அலங்கு என்ற திரைப்படம் வெளியிடப்பட்டு திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை வாழ்த்தி பாட்டாளி மக்கள் கட்சி பள்ளிபாளையம் ஒன்றிய நகரம் சார்பில் நகரத்தின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொதுமக்களுக்கு நன்கு பரீட்சையமான  அரசியல் தலைவர்களுக்கு என பிளக்ஸ் பேனர் அந்தந்த கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில்  வைப்பது வழக்கமான ஒன்றாகும் . ஆனால் அரசியல் கட்சி தலைவரின் மகளுக்கு,அவரை வாழ்த்தும் வகையில்  நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை, பார்க்கும்  பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் ....

Similar News