மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம், மலரஞ்சலி

 குமாரபாளையத்தில்  மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது;

Update: 2024-12-28 14:28 GMT
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கிய மவுன ஊர்வலத்தில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். சேலம் சாலையில் வந்த மவுன ஊர்வலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

Similar News