திருப்பூரில் நோபல் உலக சாதனை நிகழ்வு ஐந்து மணி நேரம் ரிலே ஸ்கேட்டிங் போட்டி!
திருப்பூரில் நோபல் உலக சாதனை நிகழ்வு! ஐந்து மணி நேரம் தொடர் ரிலே ஸ்கேட்டிங் போட்டி-மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை!;
திருப்பூரில் நோபள் உலக சாதனை நிகழ்வு ஐந்து மணி நேரம் தொடர் ரிலே ஸ்கேட்டிங் போட்டி - மாவட்டம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை -சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பாராட்டு திருப்பூர் வேலம்பாளையம் டி டி பி மில் அருகில் உள்ள ஜே. எஸ். ஏ. ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் ஜோயோ ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் 5 மணி நேரம் தொடர் ரிலே ஸ்கேட்டிங் எனும் நோபள் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த 5 மணி நேரம் தொடர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வு மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை 5 மணி நேரம் நடைபெற்றது, ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயது முதல் 18வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தினர், இந்த 5 மணி நேரம் தொடர் உலக சாதனை ஸ்கேட்டிங் விளையாட்டில் கலந்து கொண்டு உலகசாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.