பொதுமக்களுக்கு மாத காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அஜித் ரசிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு மாத காலண்டர் வழங்கப்பட்டது;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே தன்னம்பிக்கை நாயகன் அஜித் அசோசியேஷன் சார்பில், புதிதாக பிறக்கும் 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்க வேண்டும் என வாழ்த்தி பொது மக்களுக்கு இலவசமாக காலண்டர் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது, நிகழ்விற்கு தன்னம்பிக்கை நாயகன் அஜித் அசோசியேஷன் மாவட்ட தலைவர் K சதிஸ்குமார் தலைமை வகித்தார்,. மாவட்ட செயலாளர் R.தனசேகர் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட பொருளாளர் C.கார்த்தி, துணை தலைவர் ஆர்.சதீஷ், துணை செயலாளர் அருண்குமார் முன்னிலையில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தினசரி நாள்காட்டி காலண்டர் இலவசமாக வழங்கப்பட்டது, நிகழ்வில் பலர் பங்கேற்றனர்.....