விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை

குமாரபாளையம் விசைதறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சு வார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு;

Update: 2024-12-30 13:58 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இந்த விசைதறிகளை இயக்கும் விசைத்தறி தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர் மேலும் இதனைச் சார்ந்த கார் ஓட்டுபவர் நூல் ஓட்டுபவர் அச்சு பிரிப்பவர் ஒடியிருப்பவர் என ஏராளமான தொழிலாளர்கள் விடுதலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு ஆண்டு தோறும் தை மாதம் போனஸ் வழங்குவது வழக்கம் இந்தாண்டு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் தொழிலாளர் நல ஆணையத்தின் மனு வழங்கினர் இந்த மனுவினை ஏற்ற தொழிலாளர் நல சங்க இணை ஆணையர் செண்பக ராமன் தற்பொழுது 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழிலாளர்நல சங்கத்தையும் குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் நல சங்கம் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பி மாலை 12 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்து விசைத்தறி தொழிலாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

Similar News